ஒயிட்வாஷ் ஆகி படுதோல்வியடைந்த இந்தியா! அவர்களுக்கு பெரிய ஏமாற்றம் என இலங்கை வீரர் கருத்து

Report Print Raju Raju in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக இழந்த நிலையில் அது குறித்து இலங்கை முன்னாள் வீரர் அர்னால்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த டி20 தொடரை 5-0 என்று இந்திய அணி வென்றது.

ஆனால் அதற்கு பழிதீர்க்கும் விதமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து முழுமையாக ஒயிட் வாஷ் செய்தது.

இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த இலங்கை முன்னாள் வீரர் ருசல் அர்னால்ட், நியூசிலாந்து தொடரை ஒயிட் வாஷ் செய்துவிட்டது.

இது தரமான கிரிக்கெட் தொடராக இருந்தது, ஆனால் இந்திய அணி சரியாக கையாளாததால் அது அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்