2020ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்: கங்குலி திட்டவட்டம்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

ஐபிஎல் போட்டிகள் இல்லாமல் 2020ம் ஆண்டை முடிக்க விருப்பமில்லை என முன்னணி ஜாம்பவனான சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

இலங்கை, யுஏஇ மற்றும் நியூசிலாந்து நாடுகள் போட்டியை நடத்த முன்வந்துள்ளன.

இந்நிலையில் கங்குலி அளித்துள்ள பேட்டியில், 2020ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெறவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

உலககிண்ண டி20 போட்டிகள் குறித்து ஐசிசி இன்னும் முடிவு செய்யவில்லை.

35- 40 நாட்கள் கிடைத்தாலே ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்திவிடலாம்.

மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை போன்றவை ஐபிஎல் போட்டியில் பெரிய அணிகளாக உள்ளன. ஆனால் இப்போது இந்த நகரங்களில் ஐபிஎல் போட்டியை நடத்த முடியுமா என்று தெரியவில்லை.

வெளிநாட்டில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் பிசிசிஐக்கும் அணிகளுக்கும் அதிக செலவை அளிக்கக்கூடியதாக இருக்கும்.

எனவே நிலைமையை கூர்ந்து கவனித்து அதற்கேற்ற முடிவுகளை எடுக்கவிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்