இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் தொடர் நடத்த பேச்சுவார்த்தை! ரசிகர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சி தகவல்

Report Print Raju Raju in கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை தொடர் ரத்தாகிவிட்ட நிலையில் அந்த நேரத்தை பயன்படுத்தி இலங்கை - வங்கதேசம் அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

அவுஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பரில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த ஐசிசி ஏற்பாடு செய்திருந்தது. இதற்கான போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்றால் தற்போது தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த நேரத்தில் பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் - அக்டோபர் - நவம்பரில் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமீரேட்சில் நடைபெற இருக்கிறது. ஐசிசி தொடர் என்பதால் அனைத்து அணிகளுக்கும் மற்ற விளையாட்டு போட்டிகள் இருக்காது. இதனால் ஐபிஎல் போட்டியை நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் இலங்கை மற்றும் வங்காளதேச அணி வீரர்கள் அதிக அளவில் இடம்பெறவில்லை. மேலும், ஜூலை மாதம் வங்காளதேசம் இலங்கை சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது.

கொரோனாவால் இந்தத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தத் தொடரை நடத்த வங்காளதேசம் விரும்புகிறது. அக்டோபர் மாதத்தில் மூன்று டெஸ்ட் போட்டிகளை நடத்த வங்காளதேசம் இலங்கையுடன பேசி வருகிறது.

கொரோனா பாதிப்பு மிகவும் குறைவான நாடுகளில் ஒன்று இலங்கை. இதனால் இலங்கை சென்று விளையாடுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. இதைவிட சிறந்த ஆசியக் கண்டத்தில் மீண்டும் கிரிக்கெட்டை தொடங்க வேறு எந்த நாடும் சாதகமாக இருக்காது என்று வங்காளதேசம் தெரிவித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்