துடுப்பாட்ட வீரர்களுக்கான ஐசிசி தரவரிசை: முதலிடத்தை தக்க வைத்த வீரர்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

ஐசிசியின் ஒருநாள் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதல் இடத்தை தக்க வைத்தார்.

ஐசிசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒருநாள் போட்டி துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 871 புள்ளிகளுடன் முதல் இடத்தையும்,

அணியின் துணைத் தலைவர் ரோகித் ஷர்மா 855 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தையும் தக்க வைத்துள்ளனர்.

மூன்றாம் இடத்தில் பாகிஸ்தானின் பாபர் அசாம், 4வது இடத்தில் நியூஸிலாந்தின் ராஸ் டைலர், 5ஆம் இடத்தில் தென்னாப்பிரிக்காவின் டு பிளசிஸ் ஆகியோர் உள்ளனர்.

பந்துவீச்சுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா தனது 2ஆம் இடத்தை தக்க வைத்துள்ளார்.

முதல் இடத்தில் நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் உள்ளார். 3ஆம் இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மானும், 4ஆம் இடத்தில் அவுஸ்திரேலிய வீரர் பட் கம்மின்ஸும், 5ஆம் இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் ரபாடாவும் உள்ளனர்.

சகலத்துறை வீரர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமத் நபி முதல் இடத்தில் உள்ளார்.

அவரைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், பாகிஸ்தான் வீரர் இமாத் வசிம், நியூசிலாந்து வீரர் கோலின் டி கிராண்ட்ஹோம், இங்கிலாந்து வீரர் கிரிஸ் வோக்ஸ் ஆகியோர் 2, 3, 4, 5 ஆகிய இடங்களை பிடித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்