ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு எதிராக வழக்கு

Report Print Kavitha in கிரிக்கெட்
259Shares

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடத்த பிசிசிஐ முடிவு செய்து இதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் போட்டி வெளிநாட்டில் நடத்தப்பட்டால் இந்தியாவுக்கு பொருளாதாரம், வருவாய் இழப்பு ஏற்படும் என்று வழக்கறிஞர் ஒருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

லகூ என்ற வழக்கறிஞர் ஒருவர் “ கொரோனா தொற்று அனைத்து தொழில்துறையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடத்தினால், பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும். நாட்டிற்கு தற்போது இதுதான் மிகவும் அவசியமானது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஐபிஎல் போட்டிகள் துபாய், ஷார்ஜா, அபு தாபியில் நடைபெற இருப்பதால் இதற்காக நாளை வீரர்கள் துபாய் புறப்பட்டுச் செல்ல இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்