ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கியுள்ள ஐபிஎல் தொடரை எந்த அணி வெல்ல வாய்ப்பு? சி.எஸ்.கே நட்சத்திர வீரர் பிராவோ பதில்

Report Print Raju Raju in கிரிக்கெட்
215Shares

ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றி வாய்ப்பு உள்ள அணி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பிராவோ பேசியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் 36 வயதான வெய்ன் பிராவோ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எல்லா அணிகளுமே சென்னை சூப்பர் கிங்சுக்கு சவாலானவை தான்.

இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் தான் சென்னை அணிக்கு எப்போதும் கடினமான அணியாக இருந்து வருகிறது. ஐ.பி.எல். வரலாற்றை புரட்டிப்பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் எப்படிப்பட்ட கடினமான எதிரணி என்பது தெரியும்.

ஆனால் ஐ.பி.எல்.-ல் எல்லா அணிகளும் சிறந்தவை தான். அனைத்து அணிகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் மதிக்கிறது. இதே போல் மற்ற அணிகளும் சென்னை அணி மீது மதிப்பும், மரியாதையும் வைத்து உள்ளன. இது கடும் போட்டியும், சவாலும் நிறைந்த தொடர். எந்த அணியாலும் ஜெயிக்க முடியும் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்