48 வயதிலும் அற்புதமாக கேட்ச் பிடித்த இந்திய வீரர் பிரவீன் தாம்பே! வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில், இந்திய வீரரான பிரவீன் தாம்பே பிடித்த கேட்ச் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர் போன்றே, மேற்கிந்திய தீவில் கரீபியன் பிரிமீயர் லீக் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

அதன் படி இந்தாண்டு தொடர் அங்கு நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், 48 வயதான பிரவீன் தாம்பே, ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்தியா சார்பில் கரீபியன் லீக் தொடரில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்த அவர் 48 வயதில் கிரிக்கெட் விளையாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில், பிரவீன் தாம்பே செயின்ட் கீட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது இளம் வீரரைப் போல அசாத்தியமான ஒரு கேட்சை ஓடிவந்து பிடித்தார்.

48 வயதிலும் அவர் பிடித்த இந்த அசத்தலான கேட்ச் தற்போது பலரது பாராட்டுக்களைப் பெற்றது. அதுமட்டுமின்றி அதிக அளவு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்