இரண்டு சூப்பர் ஓவர்! ஒவ்வொரு பந்திலும் த்ரில்: பஞ்சாப்-மும்பையின் பரபரப்பான கடைசி நிமிட வீடியோ காட்சிகள்

Report Print Santhan in கிரிக்கெட்

பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதிய ஆட்டம் டிரா ஆன நிலையில், அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஓவர் வீசப்பட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின, இப்போட்டியில் பலம் வாய்ந்த மும்பை அணி தான் ஜெயிக்கும் என்று பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.

ஏனெனில், முதலில் ஆடிய மும்பை அணி 176 ஓட்டங்கள் குவித்திருந்தது. இதை பஞ்சாப் அணி எட்டிபிடிக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் பஞ்சாப் அணி அபராமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 176 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை டிரா செய்தது.

அதன் பின் சூப்பர் ஓவர் வீசப்பட்டது, அதன் படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணிக்காக கேஎல் ராகுலும், பூரனும் இறங்கினர். மும்பை சார்பில் பும்ரா பந்து வீசினார்.

முதல் பந்தில் ஒரு ஓட்டம் கிடைத்தது. 2-வது பந்தில் பூரன் அவுட்டானார். 3-வது பந்தில் ஒரு ஓட்டமும், 4வது பந்தில் ஒரு ஓட்டமும், 5வது பந்தில் 2 ஓட்டமும் கிடைத்தது. 6-வது பந்தில் ரகுல் அவுட்டானார். சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 5 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து, மும்பை அணி சார்பில் ரோகித் சர்மா, டி காக் களமிறங்கினர். பஞ்சாப் சார்பில் ஷமி பந்து வீசினார்.

முதல் பந்தில் ஒரு ஓட்டமும் ,2வது பந்தில் ஒரு ஓட்டமும், 3வது பந்தில் ஒரு ஓட்டமும் கிடைத்தது. 4வது பந்து டாட் பாலாக மாற, 5வது பந்தில் ஒரு ஓட்டம் கிடைத்தது. கடைசி பந்தில் ஒரு ரன் மட்டும் கிடைக்க போட்டி மீண்டும் சமனானது.

இதையடுத்து, 2வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 11 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்து இறங்கிய பஞ்சாப் அணி 15 ஓட்டங்கள் எடுத்து பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்