2020 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே சொதப்பியதற்கு முக்கிய காரணம் இது தான்! வெளிப்படையாக கூறிய பிரையன் லாரா

Report Print Basu in கிரிக்கெட்
613Shares

2020 ஐபிஎல் சீசனில் சென்னை அணி மோசமாக விளையாடியதற்கான முக்கிய காரணத்தை மேற்கிந்தய தீவு முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா வெளிப்படுத்தியுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளம் வீரர்களை விட பழைய வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதே இந்த சீசனில் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டதாக பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் அனுபவ வீரர்கள் அதிகம் இருந்தாலும், இளம் வீரர்கள் யாரும் இல்லை. அணியில் நிறைய பழைய வீரர்கள் இருக்கிறார்கள்.

அணியில் இருக்கும் மற்ற நாட்டு வீரர்கள் கூட நீண்ட காலமாக அந்த அணியிலேயே இருக்கிறார்கள். இதுவே அவர்களுக்கு இந்த சீசன் போட்டிகளில் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டது என லாரா கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்