இலங்கையில் நடைபெறும் லீக் தொடரில் விளையாடவுள்ள 2-வது இந்திய வீரர்! யார் தெரியுமா? வெளியான தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்
653Shares

இலங்கையில் நடைபெறும்ப் புதிய டி20 லீக் தொடரில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று உலகின் பல்வேறு நாடுகளில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

அவுஸ்திரேலியாவில் பிக்பாஸ் லீக் தொடர், கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேசத்தில் வங்கதேசப் பிரீமியர் லீக் என தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதே போன்று இலங்கையில், இலங்கை பிரீமியர் லீக் என்ற ஒரு டி20 லீக் தொடங்கப்பட்டது. ஆனால் போதிய ஸ்பான்சர்கள் மற்றும் நிதி இன்றி அந்த தொடர் பாதியில் கைவிடப்பட்டது.

தொடர்ந்து அதற்கான முயற்சிகள் நடைபெற்று கடந்த 7 வருடங்களுக்கு மேலாக அதனை சரிசெய்ய முடியவில்லை.

இந்நிலையில் மீண்டும் லங்கா பிரீமியர் லீக் என்ற பெயரில் புதிய டி20 லீக் தொடரை அறிமுகப்படுத்தியிருக்கிறது

இலங்கை கிரிக்கெட் வாரியம். இந்த தொடர் வருகிற 26-ஆம் திகதி துவங்குகிறது மொத்தம் ஐந்து அணிகள் மட்டுமே விளையாடுகின்றன. கொழும்பு, தம்புளா, கல்லி, ஜப்னா, கண்டி ஆகிய ஐந்து நகரங்களை மையமாக வைத்து இந்த அணிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இதில் இந்திய வீரர்கள் சிலரும் விளையாட போகிறார்கள் ஓய்வுபெற்ற இந்திய வீரரான முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் படேல் கண்டி அணிக்காக விளையாட போகிறார். இந்திய அணிக்காக இவர் 13 டெஸ்ட் போட்டிகளிலும் 70 ஒருநாள் போட்டிகளிலும் 3 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

இதற்கு முன், இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கண்டி அணிக்காக ஒப்பந்தம் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்