இந்திய அணியில் இவரை எடுத்திருக்க வேண்டும்! அற்புதமான வீரரை ஏன் எடுக்கவில்லை? லாரா வேதனை

Report Print Santhan in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் அவுஸ்திரேலியா அணிக்கெதிரான தொடரில் தெரிவு செய்யப்பட்டாதது குறித்து மேற்கிந்திய தீவு அணியின் முன்னாள் வீரர் பிரைன் லாரா கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ரோகித் தலைமையிலான மும்பை அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.

மும்பை அணியில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்தார். அதுமட்டுமின்றி அவருடைய ஆட்டம் ஒவ்வொரு ஆண்டும், வியக்க வைக்கும் வகையில் உள்ளது.

இப்படி ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும், சூர்யகுமார் யாத்வ்விற்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை, இந்த முறை அவுஸ்திரேலியா தொடரில் தெரிவு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் தெரிவு செய்யப்படவில்லை. இது முன்னணி வீரர்கள் ரசிகர்கள் என பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இதனால் அவரை அணியில் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்நிலையில், இது குறித்து மேற்கிந்திய தீவு அணியின் முன்னாள் வீரரான பிரைன் லாரா, சூர்யகுமார் செம க்ளாஸ் பிளேயர். நான் ஒரு வீரர் செய்யும் ஸ்கோரை வைத்து அவரது தரத்தை மதிப்பிடுபவன் அல்ல.

அவர்களின் டெக்னிக், அழுத்தத்தை கையாளும் விதம், அவர்களின் பேட்டிங் ஆர்டர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த வீரர் எப்படி ஆடுகிறார் என்பதை மதிப்பிடுபவன். அப்படி பார்க்கும்போது சூர்யகுமார் யாதவ் சூப்பர் துடுப்பாட்ட வீரர். அவர் மும்பை அணிக்காக மிகச்சிறந்த பங்காற்றியிருக்கிறார்.

ரோஹித் மற்றும் டி காக் ஆரம்பத்திலேயே அவுட்டான எத்தனையோ போட்டிகளில் சூர்யகுமார் சிறப்பாக ஆடி அணியை கரைசேர்த்திருக்கிறார்.

மூன்றாம் வரிசை என்பது மிக முக்கியமான பேட்டிங் வரிசை. அந்த வரிசையில் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் தான் இறக்கப்படுவார். அவரை அவுஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்