புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா! அவுஸ்திரேலியாவுடன் அடுத்த தோல்வியால் கோஹ்லி மீது கடும் விமர்சனம்

Report Print Santhan in கிரிக்கெட்
644Shares

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில், இந்திய அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்ததால், இந்திய அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்திய அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட மூன்று தொடர்களில் விளையாடவுள்ளது.

இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி அடுத்தடுத்து தோல்வியடைட்ந்து தொடரை இழந்தது. இதனால் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை சூப்பர் லீக் புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி இதுவரை ஆடிய 2 போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

அதே நேரம் அவுஸ்திரேலியா அணி விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவி 40 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இரண்டாம் இடத்தில் இங்கிலாந்து அணி 30 புள்ளிகளுடனும், பாகிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்