மைதானத்தில் சக வீரரை கோபத்தில் அடிக்க முற்பட்ட நட்சத்திர வீரர்! கமெராவில் சிக்கிய காட்சி: அதன் பின் வெளியிட்ட புகைப்படம்

Report Print Santhan in கிரிக்கெட்
458Shares

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் டி20 தொடரில், நட்சத்திர வீரரான முஷ்பிகிர் ரஹீம் சக வீரை அடிக்க முற்பட்ட வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முஷ்பிகிரிர் ரஹீம் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

வங்கதேசத்தில், the Bangabandhu T20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான லீக் போட்டி முடிவடைந்த நிலையில், எலிமினேட்டர் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில், தாக்கா - பரிஷல் அணிகள் நேற்று மோதின. தாக்கா அணிக்கு அணித்தலைவராக இருக்கும் முஷ்பிகிர் ரஹீம், சக வீரர் ஒருவரை அடிக்க முற்பட்டார்.

ஏனெனில், எதிரணியான பரிஷல் அணியின் அபீப் ஹுசைன் சிறப்பாக விளையாடிக்கொண்டு இருந்தார். 17 ஆவது ஓவரின் கடைசிப் பந்தை அபீப் ஹுசைன் தூக்கியடிக்க அது எட்ஜ் ஆகி பந்து மேலே சென்றது,

அது தன்னுடைய கேட்ச் என சொல்லிக்கொண்டே ரஹீம் ஓடி வர, அந்தப் பந்தை பிடிக்க பீல்டரான நசும் ஓடி வர இருவரும் மோதிக்கொள்வது போல சென்றனர்.

ஆனால் இறுதியாக அந்த கேட்சை ரஹீம் பிடித்தார். பந்தை பிடித்தவுடன் நசூமை அடிக்க கையை ஓங்கியபடி பாய்ந்தார், கண்டபடி வசைபாடினார்.

இதனையடுத்து சக வீரர்கள் ரஹீமை சமாதாப்படுத்தினர். இறுதியில் டாக்கா அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இருப்பினும் பங்களாதேஷ் தேசிய அணியின் முக்கிய வீரரரும், மூத்த வீரருமான ரஹீமின் இந்த செயல் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது.

இந்நிலையில், தற்போது முஷ்பிகிர் ரஹீம் இப்படி நடந்து கொண்டதற்கு அவரிடம் மன்னிப்பு கோரி, அவருடன் மறுநாள் காலை ஒன்றாக ஜிம்மில் எடுத்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் மைதானத்தில் ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும், பிசிசிஐ-யின் விதிமுறைகளை மீறியதன் காரணமாகவும், ரஹீம்மிற்கு போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒழுக்கமற்று நடந்து கொண்ட பதிவிலும் அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

நான்கு அல்லது அதற்கு மேற்பட்டு ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொண்டால், அதற்கான புள்ளிப்பட்டியலில் அவர் பெயர் இடம் பெற்று, போட்டிகளில் விளையாட தடை கூட விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்