அன்று கோஹ்லி செய்த உதவிக்கு... இன்று ஸ்டீவ் ஸ்மித் செய்த கைமாறு: குவியும் பாராட்டு

Report Print Santhan in கிரிக்கெட்
374Shares

இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, உப்பு தாள் சர்ச்சையில் சிக்கி திரும்பிய ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிலையில், அதற்கு கைமாறு செய்யும் வகையில் ஸ்டீவ் ஸ்மித், கோஹ்லிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயண மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி, மூன்று வித தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிந்த நிலையில், இரு அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதையடுத்து, கோஹ்லி அனுஷ்காவிற்கு குழந்தை பிறக்கவுள்ளதால், நாடு திரும்புகிறார்.

இவரின் இந்த முடிவை இந்தியாவின் முன்னணி வீரர்கள் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அவுஸ்திரேலியா அணி வீரரான ஸ்டீவ் ஸ்மித், கோஹ்லியின் இந்த முடிவை பாராட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், கோஹ்லி எடுத்த முடிவில் தவறு இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் தனது குடும்பத்தோடு இருக்க வேண்டும். தனது மனைவியோடு இருக்க வேண்டும்.

இந்தியா செல்லும் அவருக்கு நிறைய அழுத்தம் இருக்கும். அவரின் இந்த துணிச்சலான முடிவை பாராட்டுகிறேன். இப்படிப்பட்ட தருணங்களை கோஹ்லி மிஸ் செய்ய கூடாது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் தனது மனைவியோடு இருக்க வேண்டிய நேரம் இது. அவர் அதை செய்கிறார். எல்லாம் நன்றாக செல்லும் என்று நம்புகிறேன். அவருக்கும், அவரின் மனைவிற்கும் என்னடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்மித் உப்புதாள் சர்ச்சை காரணமாக தடை பெற்று மீண்டும் விளையாட திரும்பிய போது, அவரை இந்திய ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் அப்போது கோஹ்லி, ஸ்மித்தை பாராட்டுங்கள், இப்படி கிண்டல் செய்யாதீர்கள் என்று ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார்.

அன்று கோஹ்லி செய்த இந்த செயலுக்கு, ஸ்மித் இன்று கைமாறு செய்துள்ளதாக, ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்