ஐபிஎல் ஏலத்தில் என்னை எடுக்கமாட்டங்கனு முன்பே தெரியும்! அவுஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் பதில்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares

ஐபிஎல் ஏலத்தில் என்னை எடுக்கமாட்டார்கள் என்பது எனக்கு முன்பே தெரியும் என அவுஸ்திரேலியா அணியின் துவக்க வீரர் ஆரோன் பின்ச் கூறியுள்ளார்.

இந்தியாவின் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்களை எந்த ஒரு அணியும் எடுக்க முன்வரவில்லை.

குறிப்பாக நியூசிலாந்தின் மார்டின் கப்தில், அவுஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் போன்றோரை எந்த அணியும் எடுக்கவில்லை.

இது குறித்து ஆரோன் பின்ச் கூறுகையில், ஐபிஎல் ஏலத்தில் இப்படி நடக்கும் என முன்பே தெரியும். இது எதிர்பார்க்காத விசயம் கிடையாது. நான் நிறைய விசங்களை கற்று கொள்வேன்.

எனது குடும்பத்தினருடன் எனது நாட்டிலேயே நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைத்துள்ளது ஒரு வகையில் நல்ல விசயம் தான். எனது துடுப்பாட்ட ஸ்டைலில் இருகும் சில குறைகளை சரி செய்து அதற்கான பயிற்சியும் எடுத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்