இந்திய அணியில் தமிழக வீரருக்கு அஸ்வினுக்கு இனி வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்! சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares

இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் அஸ்வினுக்கு ஒருநாள் மற்றும் டி20 அணியில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்று கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, அங்கு டெஸ்ட் தொடரை வென்றதுடன், தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

நடைபெற்று முடிந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் 1-1 என்று சமநிலை உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சிறப்பாக பந்து வீசி, பேட்டிங் செய்தார்.

அவருக்கு இப்போது வரை வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இதனால் இவருக்கு நிச்சயம் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், எனக்குத் தெரிந்த வரை, இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் மீண்டும் அஸ்வின் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

ஏனெனில், ஏற்கெனவே ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா இருவர் இருக்கிறார்கள். இதில் 7-வது இடத்தில் ஹர்திக் பாண்டியாவும், ஜடேஜாவும் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள்.

3 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெறலாம், அல்லது ஒரு சுழற்பந்துவீச்சாளர் இரு வேகப்பந்துவீச்சாளர்கள் கூட இடம் பெறலாம்.

எனவே, இப்போதுள்ள சூழலில் இந்திய ஒருநாள், டி20 அணிக்கு தகுதியானவராக அஸ்வின் இருப்பார் என நான் நினைக்கவி்லலை.

என்னைப் பொருத்தவரை டெஸ்ட் போட்டிக்கு உகந்தவீரராகவே அஸ்வினைப் பார்க்கிறேன். அடுத்த 6 ஆண்டுகள்வரை அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் தாராளமாக விளையாடலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்