இரண்டே நாளில் ஆட்டத்தை முடித்த இந்தியா! இங்கிலாந்து டெஸ்ட்டில் அபார வெற்றி: அசர வைத்த சுழற்பந்து வீச்சாளர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரில் 2--1 என்று முன்னிலை வகித்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, இங்கு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற துடுப்பாட்டத்தை தெரிவு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அக்சார் பட்டேல் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்தியா 145 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 66 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் 5 விக்கெட்டும், ஜேக் லீச் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 33 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே அக்சார் பட்டேல் க்ராலி, பேர்ஸ்டோவ் ஆகிய இருவரையும் டக் அவுட்டில் வெளியேற்றினார்.

அதன்பின் அக்சார் பட்டேல், அஷ்வின் மாயாஜாலத்தில் இங்கிலாந்து 81 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அக்சார் பட்டேல் 5 விக்கெட்டும், அஷ்வின் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

81 ஓட்டங்களுக்குள் இங்கிலாந்து சுருண்டதால் 48 ஓட்டங்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. இதனால் 49 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்