மாலைத்தீவுகள் பற்றி தெரிந்துக் கொள்ள இதை ஒரு க்ளிக் செய்யுங்கள்

Report Print Kavitha in கல்வி
233Shares
233Shares
ibctamil.com

மாலைத்தீவுகள் (Maldives) அல்லது மாலைத்தீவுகள் குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நாடாகும்.

மாலைத்தீவுகள் உலகிலேயே தட்டையான நாடு என்ற சாதனைக்குரிய நாடாகும்.

இது இந்தியாவின் இலட்சத்தீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கிமீ தென்மேற்காகவும் அமைந்துள்ளது.

90,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். மொத்தம் 26 பவளத்தீவுகளில் 1,192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200 இல் மட்டும் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறன.

மாலைத்தீவுகளின் தலா வருமானம் 1980களில் அதிகூடிய வளர்ச்சியான 26.5 சதவீதத்தைக் காட்டியது, இது 1990களில் 11.5 சதவீத வளர்ச்சியை அடைந்தது. இப்போதும் அது பேணப்படுகிறது.

மாலைத்தீவுகளின் பொருளாதாரம் மீன்பிடி மற்றும் கடல் சார் துறைகளில் முக்கியமாகத் தங்கியுள்ளது. மீன்பிடித்தல் மக்களின் முக்கிய தொழிலாக இருந்துவருகிறது. அரசு மீன்பிடிகைத்தொழிலின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவி செய்கிறது.

இன்று மொத்த தேசிய உற்பத்தியின் 20% வழங்கும் சுற்றுலாத்துறை, நாட்டுக்குக் கூடிய வெளிநாட்டு வருவாயைப் பெற்றுக் கொடுக்கும் துறையாக விளங்குகிறது.

மாலைத்தீவுகளில் இஸ்லாம் இந்திய வாணிப சமுதாயத்தைத் தவிர்த்த ஏனைய மாலைத்தீவினர் சுன்னி இஸ்லாம் மதப்பிரிவை சேர்ந்தவர்களாகும்.

மாலைத்தீவின் தலைநகரம் மற்றும் பெரிய நகரம் - மாலே

மாலைத்தீவின் அழைப்புக்குறி - 960

மாலைத்தீவின் இணையக் குறி - mv

மாலைத்தீவின் நாணயம் - றவுஃபியா (MVR)

ஐக்கிய இராச்சியத்திடமிருந்து விடுதலை தினம்? july 26 1965

மாலைத் தீவுகளின் முதல் குடியரசுத் தலைவர்?

சுல்தான் ஆட்சியில் பிரதமராக இருந்த இப்ராகிம் நசீர் ஆவார்.

மாலைத்தீவின் பாரம்பரிய கைத்தொழில் - பாய் இழைத்தல், நெசவு, சிற்பம், கயிறு திரித்தல்.

மாலைத்தீவின் மக்கள் தொகை - 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். மொத்தம் 26 பவளத்தீவுகளில் 1,192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200 இல் மட்டும் மனித குடியேற்றங்கள் காணப்படுகிறன.

மிகப் பிரசித்தமான உள்ளூர் இசை - போடுபெரு

மாலைத்தீவுகள் தேசிய கொடி?

மாலைத்தீவின் சின்னம்?

மாலைத்தீவின் பிரபலமான உணவு எது? Coconuts,Fish, Starchy items,See also

மாலைத்தீவின்தேசிய மலர் எது? - pink Rose

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்