இந்தியாவில் பல துறைகளில் சாதனை படைத்த பெண்கள்

Report Print Kavitha in கல்வி

உலகில் பல்வேறு சாதனைகள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக அடுப்படியில் முடக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து படைக்கும் சாதனைகள் பல.

குடும்பம், சமூகம், கட்டுப்பாடு, கலாச்சாரம் என்பவற்றை தாண்டி பெண்களால் செய்யப்படும் இவ்வாறான சாதனைகள் தொடர்பில் நாம் அறிந்து வைத்த்திருப்பது அவசியமாகும்.

இதோ அவற்றில் சில இந்திய பெண்களின் சாதனைகள்..

 • இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல்
 • இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி
 • இந்தியாவின் முதல் பெண் பாராளுமன்ற சபாநாயகர் - மீரா குமார்
 • இந்தியாவின் முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - செல்வி விஜயலெட்சுமி (சென்னை)
 • இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் - கர்ணம் மல்லேஸ்வரி (ஆந்திரா)
 • இந்தியாவின் முதல் பெண் விண்வெளிக்கு சென்றவர் (இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) - செல்வி டாக்டர் கல்பனா சாவ்லா
 • இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு - மரகதவள்ளி டேவிட்
 • இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி - செல்வி ரஸியா பேகம்
 • இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் - அனிஸா மிர்சா (ஆமதாபாத்-குஜராத்)
 • இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி - உஜ்வாலா பாட்டீல்
 • இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் - காதம்பினி கங்குலி
 • இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் - கன்வால் வர்மா
 • இந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் - ஷீலாடோவர்
 • இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் - ஹோமய் வ்யாரவல்லா
 • இந்தியாவின் முதல் பெண் சிற்பி - மணி நாராயணி
 • இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் - ரஜினி பண்டிட்

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்