கடன் தொல்லையால் பிரபல திரைப்பட நடன நடிகை தற்கொலை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
1854Shares
1854Shares
lankasrimarket.com

கடன் தொல்லை காரணமாக சென்னையை சேர்ந்த திரைப்பட நடன நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சாலிகிராமத்தில் வசித்து வந்தவர் தேவி (37), திரைப்படங்களில் நடன நடிகையாக நடித்து வந்தார்.

அண்மை காலமாக படங்களில் வாய்ப்பு குறைந்ததால் தேவி வருமானம் இல்லாமல் தவித்து வந்துள்ளார்.

இதனால் பலரிடம் கடன் வாங்கி அதை திரும்ப செலுத்த முடியாமல் இருந்துள்ளார்.

பணத்தை திரும்பி தரக்கோரி கடன் கேட்டவர்கள் வற்புறுத்தியதால் மனமுடைந்த தேவி நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள், உயிரிழந்த தேவிக்கு வெங்கடேஷ் (37) என்ற கணவரும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்