கர்ப்பமானதை மறைத்த பிரபல நடிகைகள்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
961Shares
961Shares
lankasrimarket.com

சினிமா பிரபலங்கள் எந்த ஒரு சின்ன விடயத்தை செய்தாலும் அது ஊடகங்களில் உடனடியாக வந்துவிடும்.

ஆனால் சில முன்னணி நடிகைகள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை குழந்தை பெறும் வரை ஊடகங்களிடமிருந்து மறைத்து உள்ளார்கள்

ஐஸ்வர்யா ராய்

முன்னாள் உலக அழகியும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராயும், நடிகர் அபிஷேக் பச்சனும் கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

அதிலிருந்தே ஐஸ்வர்யா ராயின் கர்ப்பம் குறித்து ஊடகங்கள் பேச தொடங்கின.

ஆனால் அது குறித்து அவர் வாய் திறக்கவில்லை, இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு கேன்ஸ் பட விழாவில் ஐஸ்வர்யா ராய் உடல் எடை கூடியிருந்தது தெரிந்தது.

பின்னர் சில மாதங்கள் கழித்து தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அதே ஆண்டு நவம்பரில் குழந்தை பிறக்கும் எனவும் அவர் அறிவித்தார்.

ராணி முகர்ஜி

நடிகை ராணி முகர்ஜி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகம் வெளியில் பேச மாட்டார். பிரபல தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவை அவர் திருமணம் செய்ததை கூட ஊடகங்களுக்கு தெரியாமல் பார்த்து கொண்டார்.

அதே போல தான் கர்ப்பானதையும், ஆதிரா என்ற பெண் குழந்தை பிறந்ததையும் குழந்தை பிறக்கும் வரையில் வெளியில் தெரியாமல் ராணி பார்த்து கொண்டார்.

ஸ்ரீதேவி

தமிழ் மற்றும் இந்தியில் நம்பர் 1 நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவி, பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை கடந்த 1996-ஆண்டு மணந்தார்.

திருமணத்துக்கு முன்னரே ஸ்ரீதேவி கர்ப்பமாக இருப்பதாக வதந்தி பரவியது.

1997-ஆம் ஆண்டு தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதுவரை தான் கர்ப்பமாக இருப்பதை ஸ்ரீதேவி வெளியில் சொல்லவில்லை.

நீனா குப்தா

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் விவிஎன் ரிச்சட்ஸை காதலித்த நடிகை நீனா குப்தா, அதன் காரணமாக கர்ப்பமடைந்தார்.

ஆனால் குழந்தை பிறக்கும் வரை ஊடகங்களுக்கு இந்த விடயம் தெரியாதபடி அவர் பார்த்து கொண்டார்.

அம்ரிதா லடாக்

பிரபல நடிகை அம்ரிதா, ஷகீல் லடாக் என்பவரை காதலித்து வந்த நிலையில் திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமானார்.

ஆனால் இதை அவர் வெளியில் சொல்லவில்லை. ஷகீலை திருமணம் செய்த பின்னர் நிறைமாத கர்ப்பிணியாக பொது இடங்களுக்கு வந்த பின்னரே அவர் தாயாக போகிறார் என்ற விடயம் வெளியில் தெரிந்தது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்