உடல் எடை கூடிய பிரபல நடிகை: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report Print Printha in பொழுதுபோக்கு

திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியுமான நித்யா மேனன் இரு தெலுங்கு படத்தில் நடித்து பிலிம்ஃபேர் எனும் விருதுகளை வென்றுள்ளார்.

இவர் கடைசியாக தமிழில் மெர்சல் படத்தில் நடித்தார். அதில் சற்று உடல் எடை கூடியும் இருந்தார். ஆனால் இப்போது மேலும் பல கிலோ உடல் எடை கூடி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளார்.

சமீபத்தில் அவரது போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், ஓ காதல் கண்மணியில் வந்த நித்யாவா இது என்ற சந்தேகம் அடைந்துள்ளனர்.

இதனால் அவர் உடல் பருமன் பிரச்னையால் அவதிப்படுவதாக தகவல்கள் பரவ ஆரம்பித்துள்ளது.

இது குறித்து நித்யா மேனன், இதை எல்லாம் பெரிய பிரச்னை போல் பலரும் பேசுவது தான் எனக்கு நிஜமாகவே ஆச்சரியமாக உள்ளது.

இடையில் ஷூட்டிங் எதுவும் இல்லாததால் வீட்டில் ஓய்வில் இருந்தேன். உடற்பயிற்சி பக்கமே போகவில்லை. அதனால் தான் உடல் எடை கூடி விட்டது. இதை எப்படி குறைக்க வேண்டும் என்பதும் எனக்கு தெரியும்.

இதுபோல் பலமுறை எனக்கு ஆகியுள்ளது. அதற்குள் பலவிதமாக புரளி கிளப்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்