பிரபல நடிகை மும்தாஜ் இறந்துவிட்டாரா? அவரே அளித்த விளக்கம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
43Shares
43Shares
lankasrimarket.com

பிரபல பாலிவுட் நடிகை மும்தாஜ் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தி திரையுலகில் கவர்ச்சி நடிகையாக கலக்கியவர் மும்தாஜ். தற்போது 70 வயதாகும் அவர் லண்டனில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மும்தாஜ் இறந்துவிட்டதாக சில தினங்களுக்கு முன்னர் சமூகவலைதளங்களில் செய்தி வெளியானது.

இதை மறுத்து அவரின் மகள் தன்யா மத்வானி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் மும்தாஜ் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் ரோமில் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ள மும்தாஜ் தான் நன்றாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடீயோவானது தன்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பல ஆண்டுகளுக்குப் பிறகு பல பேர் என்னைப் பற்றி கவலைப்படுவதைப் பார்த்து விசித்திரமாக உணர்ந்தேன்.

உங்கள் அன்பிற்கு நன்றி, என்னை பற்றி கவலைப்படாதீர்கள். நான் மிகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்.

பலர் சொல்வதை போல நான் தனியாக இல்லை. என் பிள்ளைகள் என்னை கவனித்து கொள்கிறார்கள், நான் மகிழ்ச்சியாக உள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்