பிக் பாஸ்: கமல்ஹாசன் சொல்லிய அந்த எட்டு போட்டியாளர்கள் யார் யார்?

Report Print Trinity in பொழுதுபோக்கு
426Shares
426Shares
lankasrimarket.com

பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் எட்டு போட்டியாளர்கள் யார் யார் என நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாஸனே கூறியிருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டை ரணகளம் செய்ய ஒருவரும் காமெடி செய்ய ஒருவரும் வருவதாக கூறியிருக்கிறார். மேலும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று பேசும் வெளிப்படையான நபர் ஒருவரும், காத்திருந்து சிரித்து பேசியே மற்றவர்களை துண்டு துண்டாக்கும் நபர் ஒருவரும் கலந்து கொள்ள போவதாக கூறியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி நண்பரை காப்பாற்ற ஒன்றிரண்டு பொய்கள் சொல்லும் நபரும், பொய்யை தவிர வேறெதுவும் பேசாத ஒரு நபரும் கலந்து கொள்ள போகிறார்களாம்.

மேலும் கேமராவிற்கு முன்னால் மட்டும் நடிப்பவரும் , 24 மணிநேரமும் நடிப்பவரும் ஒன்றாக கலந்து கொள்கிறார்களாம்.

ஒன்றுக்கொன்று முரண்பட்ட பலர் ஒன்றாக வாழப்போகும் இந்த இரண்டாவது பிக்பாஸ் நிகழ்ச்சி நிச்சயம் நன்றாகவே இருக்கும் என கூறாமல் கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.

ஆனால் கலந்து கொள்பவரின் பெயர்களை நேரடியாக சொல்லாமல் கமலுக்கே உரித்தான பூடக மொழியில் அவர் போட்டியாளர்களை பற்றி கூறியிருப்பதால் பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கான சுவாரசியம் மேலும் கூடியிருக்கிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்