பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த நடிகர் சத்யராஜ் மகள்! எதற்கு தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகரான சத்யராஜின் மகள் திவ்யா மழை காலம் வந்துவிட்டதால், பொதுமக்கள் சற்று கவனமாக இருக்கும் படி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகரான சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் மிகப் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்கள் ஒருவராக உள்ளார். தன்னை சுற்றிஇருப்பவர்கள் எல்லோருமே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர், அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும், வசதியில்லாத குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்று கூறினார்.

அதை தடுப்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சில ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

இந்நிலையில், தற்போது, வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதால், புதிய வகை வைரஸ் நோய் தாக்குதல்கள் ஏற்படும் என்று கூறியுள்ளார் திவ்யா.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், பொதுமக்கள் நோய்வாய் பாதிப்பில் இருந்து தங்களைக்காத்துக்கொள்ள, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும், நோய்களை தடுக்க தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முக்கியமான சத்துக்களான விட்டமின் பி, விட்டமின் சி ஆகிய சத்துக்களுடைய உணவுப்பொருட்களை முறையாக உண்டு, எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்யும்போதுமழைக்காலங்களில் வழக்கமாக ஏற்படும் வைரஸ் பாதிப்பு, இருமல், சளி போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம் என்று அவர்கூறியுள்ளார்.

ஒருவேளை நோய்வாய்ப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று கூறிய அவர், மருந்து கடைகளில் வாங்கும்மாத்திரைகளை சரியாக கவனித்து சாப்பிட வேண்டும் என்றும் திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers