அதற்கும் நான் தயார்: வைரமுத்து விவகாரத்தில் சின்மயி காட்டம்

Report Print Arbin Arbin in பொழுதுபோக்கு

மீடூ புகார்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய சின்மயி, உண்மை கண்டறியும் சோதனைக்கு தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மீடூ விவகாரத்தில் சட்டத்தில் மாற்றம் வேண்டும். அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்றார்கள். இதுவரை அமைக்கப்படவில்லை. விழா ஒன்றில் பேசிய பாடகி சின்மயி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரைஇ இல்லை என கூறிய அவர், பாதிக்கப்பட்டோர் பலர் வழக்குபதிவு செய்தும் நடவடிக்கை இல்லை என்றார்.

சட்டம் எங்களை கைவிட்டுவிட்ட நிலையில் தான் இருக்கிறோம். டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளேன் என சின்மயி கூறியுள்ளார்.

முன்னதாக சின்மயி கூறும் புகார்கள் உண்மையாக இருந்தால் ஏன் சட்டப்படி புகார் அளிக்கவில்லை என டுவிட்டரில் சிலர் விமர்சித்தனர். வழக்கறிஞர் ஒருவர் உண்மை கண்டறியும் சோதனை தான் ஒரே வழி என்று கூற ஆத்திரமடைந்த சின்மயி, நான் தயார் என காட்டமாக பதிலளித்திருந்தார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers