பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஹரியின் தாயார் மாரடைப்பால் மரணம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஹரியின் தாயார் கனிஅம்மாள் மாரடைப்பால் தனது 81வது வயதில் காலமானார்.

நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான தமிழ் என்ற திரைப்படத்தை இயக்கியதன் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஹரி.

பின்னர் சாமி, ஆறு, சிங்கம், சிங்கம் 2, வேல், சாமி 2 உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை ஹரி இயக்கி தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.

ஹரி பிரபல நடிகர் விஜய்குமாரின் மாப்பிள்ளை ஆவார். இந்நிலையில் ஹரியின் தாய் கனிஅம்மாள் இன்று மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார்.

அவரின் உடலுக்கு நடிகர் சூர்யா இறுது மரியாதை செலுத்தினார்.

கனி அம்மாளின் உடல் தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படவுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்