பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் மனைவியை விவாகரத்து செய்தார்! புகைப்படங்களுடன் வெளியான தகவல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நடிகர் பாலா தனது மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துள்ளார்.

தமிழில் கடந்த 2003-ல் வெளியான அன்பு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் பாலா.

இவர் பின்னர் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவர் அஜித்குமாருடன் நடித்த வீரம் திரைப்படம் அவருக்கு ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்று கொடுத்தது.

மேலும் பாலா மலையாளத்தில் முன்னணி நடிகராகவும் உள்ளார். பாலாவும் கேரளாவைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி அம்ருதாவும் காதலித்து வந்தனர்.

பின்னர் 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு பிரிந்தனர்.

தொடக்கத்தில் இதுபற்றி வெளியில் காட்டிக் கொள்ளாமலிருந்த இருவரும், எங்கள் குடும்ப விடயங்கள் பற்றி எதையும் வெளியிட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஆனால் பின்னர் மனைவியை பிரிந்து விட்டதாக நடிகர் பாலா, அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்குத் தொடர்ந்தார் பாலா.

இந்த வழக்கில் நீதிமன்றம் நேற்று பாலாவுக்கு அம்ருதாவுடன் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அவர்களின் குழந்தை அவந்திகா, அம்மாவுடன் வளர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்