சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் பிரபல தமிழ் திரைப்பட நடிகர்! இளம்பெண்ணை தவறாக வீடியோ எடுத்த மகனின் செயலுக்கு பின் படும் அவஸ்தை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல வில்லன் நடிகர் சூர்யகாந்த் ஒரு வேளை சாப்பாடின்றி வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில், இன்று போய் நாளை வா, கிழக்கு சீமையிலே, தூரல் நின்னு போச்சு உள்ளிட்ட 300 திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் நடிகர் சூர்யகாந்த்.

இவரது மகன் விஜய் ஹாரீஷ் சில மாதங்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவரை வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து வந்த கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் முடங்கியதால் செலவுக்கு பணமின்றி வீட்டுக்குள் முடங்கி போனார் சூர்யகாந்த்.

தற்போது சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் உணவுக்கே வழியற்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

திரைஉலக பிரபலங்களோ அல்லது தான் சார்ந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களோ தன் வறுமை நிலை அறிந்து உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் உதவியை எதிர்நோக்கி நடிகர் சூர்யகாந்த் காத்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்