3 பேருமே திருமணம் செய்வதாக ஏமாற்றினர்! சின்னத்திரை நடிகை கழிவறையில் தற்கொலை செய்த சம்பவத்தில் புதிய திருப்பம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

சின்னத்திரை நடிகை ஸ்ரவானி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக பிரபல தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதான ஸ்ரவானி மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

8 வருடங்களாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் ஸ்ராவானி சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி ஸ்ராவணி குடும்பத்தினர் அளித்த புகாரில், ஸ்ராவணிக்கு, தேவராஜ் ரெட்டி என்பவருடன் டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் வெளியிடங்களுக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். அப்போது தேவராஜ், ஸ்ரவாணியை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டினார்.

அதிர்ச்சி அடைந்த ஸ்ரவாணி, பணம் கொடுத்துள்ளார். தொடர்ந்தும் மிரட்டி வந்ததால் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியிருந்தனர்.

தேவராஜிடம் நடத்திய விசாரணையில் ஸ்ரவாணியை அவர் குடும்பத்தினரும் குடும்ப நண்பர் சாய் கிருஷ்ணாவும் டார்ச்சர் செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாகச் சொன்னார். சாய் கிருஷ்ணாவிடம் விசாரித்தனர். ஸ்ரவாணியும் சாய் கிருஷ்ணாவும் ஏற்கனவே காதலித்து பிரிந்துவிட்டனர்.

அடுத்து தேவராஜை, ஸ்ரவாணி காதலிக்கத் தொடங்கினார். தற்கொலை செய்துகொள்வதற்கு சில மணி நேரத்துக்கு முன், ஸ்ரவாணியும் தேவராஜும் ரெஸ்டாரென்ட் ஒன்றில் சந்தித்துள்ளனர். அங்கு சாய் கிருஷ்ணாவும் இருந்துள்ளார். அவர், நடிகையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடித்துள்ளார். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவந்தது.

இதையடுத்து தேவராஜ், சாய் கிருஷ்ணா இருவரும் கைதானார்கள். இந்நிலையில் இந்த வழக்கில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் சம்மந்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இவர் தற்கொலை செய்துகொண்ட நடிகையுடன் பேசும் ஓடியோ சில நாட்களாக பரவி வந்தது.

மேலும் அசோக் ரெட்டி தயாரித்த பிரேமதோ கார்த்திக் என்ற படத்தில் ஸ்ரவாணி சின்ன கேரக்டரில் நடித்துள்ளார். சாய் கிருஷ்ணா, தேவராஜ், அசோக் ரெட்டி மூன்று பேருமே ஸ்ரவாணியை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதை பொலிசார் கண்டுபிடித்தனர். இதையடுத்தே அவர் தற்கொலை செய்துள்ளார்.

இந்த சூழலில் அசோக் ரெட்டி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார், அவரிடம் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த வழக்கில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்