கொரோனாவுக்கு திரையுலகில் அடுத்த பலி! பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நகைச்சுவை நடிகர் வேணுகோபால் கோசுரி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸால் திரையுலகிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

நடிகரும், தயாரிப்பாளருமான சுவாமிநாதன், குணசித்திர நடிகர் புளோரன்ட் பெரேரா போன்ற நடிகர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர்.

அந்த வரிசையில் பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் வேணுகோபால் கோசுரி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பல படங்களில் வேணுகோபால் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்குப் பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

வேணுகோபாலின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்