பிரபல தமிழ் திரைப்பட நடிகர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை! தெரியவந்த காரணம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தென்னரசு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தென்னரசு அடிக்கடி குடிபோதையில் மனைவியிடம், தகராறு செய்து வந்துள்ளார். தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததால், மனமுடைந்த தென்னரசு இன்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வீட்டில் இருக்கும், சீலிங் பேனில் புடவையை கொண்டு தென்னரசு தூக்கிட்டு இறந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார், தென்னரசுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்கொலை செய்து உயிரிழந்த தென்னரசு, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மெரினா திரைப்படத்தில் துணை நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்