ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் அவரது வாழ்க்கை இப்படி தான் இருக்கும்! எச்சரிக்கும் பிரபல சாமியார்

Report Print Santhan in பொழுதுபோக்கு
2050Shares

நடிகர் ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் அவரது வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும் என்று சாமியார் ஜான் போஸ்கோ தெரிவித்துள்ளார்.

பிரபல திரைப்பட நடிகரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.

ஆனால், அவரோ இன்று, நாளை என்பது போல் இன்று வரை கட்சியைப் பற்றி எந்த ஒரு அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியிடாமல், விரைவில் முடிவை அறிவிப்வேன், தேர்தலில் போட்டியிட்டால் ஜெயிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்.

இந்நிலையில், நேற்று சென்னை நடந்த நிர்வாக கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை ஈடுபட்டார். அப்போது அவரை காணபதற்காக ராகவேந்திரா திருமண மண்டப வாயிலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

அப்போது, அங்கு, நெற்றியில் பெரிய சந்தனம் வைத்து கொண்டு அதில் நிலவு போல் குங்குமம் இட்டு கொண்டு தலையில் சிவப்பு நிற துணியை முண்டாசு போல் கட்டி கொண்டு சாமியார் போல் ஒருவர் இருந்தார்.

இதனால் இவரும் ரஜினியின் ரசிகராக இருப்பாரோ என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அவரிடம் பிரபல தனியார் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்த போது, அவர் நான் ரஜினி ரசிகர் ஒன்றும் இல்லை.

பெருமாளின் ரூபம். அம்மனுடைய அருள். இரு சக்திகளும் என்னை ஆட்டி படைக்கின்றன. ரஜினியை அரசியலுக்கு வரவழைத்து மக்களை காத்து மானத்தோடு வாழ வைக்க என்னை தெய்வ அம்சங்கள் வழி நடத்துகின்றன.

ஆரம்பிக்காவிட்டால் அவருடைய வாழ்க்கை அஸ்தமித்து போய்விடும். பணம் சம்பாதிப்பதற்காக தெய்வம் ரஜினியை இந்த பூமியில் விட்டு வைக்கவில்லை.

மக்களை காக்கவும் மானத்தோடு வாழ வழிகாட்டவும் தான் பூமியில் வைத்துள்ளார். ரஜினி கடவுளின் அருளை பெற்றவர், பொருளை பற்றி கவலையில்லாமல் என் மக்களின் வேலை பற்றி கவலைப்படுற வாய்ப்பைத்தான் நான் நாடி வந்துள்ளேன்.

நான் ஆன்மீகவாதி அல்ல. மக்களையும் உங்களையும் நேசிக்கிறவன். தெய்வம் என்னுள் வந்து ஆட்டி படைக்கிறது. அவர் வருவாரா? வரமாட்டாரா? என சொல்ல நான் ஜோசியக்காரரோ மந்திரவாதியோ அல்ல, அவர் அரசியலுக்கு வந்தால் 51 சதவீதம் வாக்குகள் நிச்சயம் கிடைக்கும், அரசியலுக்கு வராவிட்டால் அவரது வாழ்வு அஸ்தமனமாகிவிடும் என்று கூறியுள்ளார்.

இவர் பேசிய இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

You May Like This Video

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்