திருமணம் ஆன 10 நாட்களில் கணவரை விவாகரத்து செய்த பிரபல விஜே ரம்யா! நீண்ட காலத்திற்கு பின் தெரிந்த உண்மை காரணம்

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல தொகுப்பாளினியான விஜே ரம்யா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து கொண்டதற்கு காரணம் என்ன என்பத் குறித்து தெரியவந்துள்ளது.

தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி மூலம் பிரபலமான ரம்யா, இப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தன்னுடை தீவிர உடற்பயிற்சி போன்றது தொடர்பான புகைப்படங்களையும், சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இதன் காரணமாகவே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இப்படி பார்க்க இளமையாக தோன்று ரம்யா கடந்த 2014-ஆம் ஆண்டே ஜெயராம் என்பவரை திருமணம் செய்து கொண்டு, அதன் பின் விவாகரத்து செய்து கொண்டார். இது பலருக்கும் தெரியும்.

ஆனால், அவர் விவகாரத்து செய்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கான உண்மை காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

திருமணமான பத்து நாட்களில் இருவருக்கும் செட் ஆகாது என முடிவு செய்துவிட்டார்களாம். அதுமட்டுமின்றி இருவரின் கருத்துக்களும் வெவ்வேறு விதமாக இருந்ததே இருவரின் பிரிவுக்கு முக்கிய காரணமாம்.

இதனால் எந்த ஒரு சண்டை சச்சரவும் இல்லாமல் அமைதியாக ரம்யா அம்மா வீட்டுக்கே வந்து விட்டதாகவும். மேலும் ஒரு வருடம் கழித்து இருவரும் விவாகரத்து பெற்று கொண்டதும் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்