அன்று மளிகைக் கடை.. இன்று கோடீஸ்வர தொழிலதிபர்! சாதனை மனிதரின் கதை

Report Print Raju Raju in தொழிலதிபர்
492Shares
492Shares
lankasrimarket.com

ப்ரியா புட் ப்ராடக்ட்ஸ் லிமிடட் நிறுவனம் இன்று 100 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனமாக திகழ்கிறது.

36 வகை பிஸ்கட்கள், 15 வகையான ஸ்நாக்ஸ் பண்டங்கள் போன்ற உணவு பொருட்களை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விற்பனை செய்கிறது.

அதோடு உணவு பொருட்கள் அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் தலைவர் கணேஷ் பிரசாத் அகர்வால் (64), கணேஷ் கடந்த 1953ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள சிறிய ஊரில் பிறந்தார்.

இவரின் அப்பா மளிகைக் கடை நடத்தி வந்தார், படிப்பது போக மற்ற நேரங்களில் மளிகை கடையில் தந்தைக்கு உதவியாக கணேஷ் இருப்பார்.

வீட்டில் மொத்தம் ஏழு பேர் இருந்ததால் மளிகைக் கடை மூலம் வந்த சொற்ப வருமானம் குடும்பத்துக்கு போதவில்லை.

அந்த சூழலிலும் வெற்றிகரமாக கல்லூரி படிப்பை முடித்த கணேஷ் அடுத்த 14 ஆண்டுகள் மளிகைக் கடையிலேயே உதவியாக இருந்தார்.

பின்னர், அதிகம் சம்பாதிக்க எதாவது செய்தே ஆக வேண்டும் என முடிவெடுத்த அவர் உணவு சம்மந்தமான தொழில் செய்ய தீர்மானித்தார்.

அதன்படி, கடந்த 1986-ல் தந்தை தனக்கு கொடுத்த சிறிய நிலத்தை விற்றும் பலரிடம் கடன் பெற்றும் 25 லட்சம் திரட்டி ஒரு பிஸ்கட் தொழிற்சாலையை அமைத்து, அதற்கு ப்ரியா என பெயரும் வைத்தார்.

பிஸ்கட் ஆலை அமைக்கவே பணமெல்லாம் செலவாகிவிட்டதால் கொல்கத்தாவில் சின்னதாக ஒரு வாடகை அலுவலகமே அவரால் அமைக்க முடிந்தது.

எல்லா பணிகளையும் இழுத்து போட்டு செய்ய ஆரம்பித்த கணேஷ் அப்போது தினமும் காலை 7 மணியிலிருந்து இரவு 11 மணி வரை கடுமையாக உழைப்பார்.

அப்போது பார்லே ஜி, பிரிட்டானியா போன்ற பிரபலமான பிஸ்கட்கள் இருந்ததால் ப்ரியா நிறுவன பொருட்களுக்கு முதலில் பெரிய வரவேற்பில்லை.

பின்னர் வேலைக்கு அதிக ஆட்களை வைத்து வீடு வீடாக தனது பிஸ்கட் குறித்து விளம்பரப்படுத்தியதோடு மற்ற நிறுவனத்தை விட குறைந்த விலையில் பொருட்களை விற்றார்.

ப்ரியா உணவு வகைகளின் சுவையும், தரமும் மக்களை ஈர்க்க தொடங்க வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

கடந்த 1995-ல் விற்பனை 5 கோடியாக உயர்ந்த நிலையில் மேலும் ஐந்து ஆலைகள் அமைக்கப்பட்டன.

இதையடுத்து மற்ற ஸநாக்ஸ் பண்டங்களும் ப்ரியா நிறுவனம் தயாரிக்க தொடங்கியது. தற்போது ஆண்டுக்கு 100 கோடிக்கு மேல் ப்ரியா பிராண்ட் விற்பனை செய்கிறது.

இதோடு, கிழக்கு இந்தியா பகுதியில் பிஸ்கட் சந்தை 1000 கோடி ரூபாய் என்றிருக்கும் நிலையில் அதில் 5 சதவீதத்தை ப்ரியா நிறுவனமே வைத்துள்ளது.

சந்தையில் தனது நிறுவன பங்கை இருமடங்காக உயர்த்துவதே கணேஷின் அடுத்த இலக்காக உள்ளது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்