10 ஆண்டுகளாக முகேஷ் அம்பானி வாங்கும் சம்பளம் எவ்வளவு கோடி?

Report Print Deepthi Deepthi in தொழிலதிபர்
338Shares
338Shares
lankasrimarket.com

ஆசிய நாடுகளில் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பு 41.8 பில்லியன் டொலர் ஆகும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் முகேஷ் அம்பானி கடந்த 10 ஆண்டுகளாக வாங்கும் சம்பளம் 15 கோடி ரூபாய் ஆகும்.

2017-18ஆம் நிதியாண்டில் முகேஷ் அம்பானிக்கு சம்பளம், ஊக்கச் சலுகைகள் உள்ளிட்டவைகளைச் சேர்த்து 15 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த ஊதிய வரம்பை, கடந்த 2009ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியே நிர்ணயித்திருக்கிறார்.

அதுமுதல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளின் சம்பளங்கள் உயர்ந்து வரும்போதும் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக முகேஷ் அம்பானி அதே ஊதியத்தையே பெற்று வருகிறார்.

நிறுவனத்தில் முழு நேர இயக்குநர்களாகப் பணியாற்றி வரும் முகேஷ் அம்பானியின் உறவினர்களான நிகில் மேஸ்வானி, ஹிதல் மேஸ்வானி ஆகியோரின் ஊக்கச் சலுகைகள் உள்ளிட்ட சம்பளம் 19 கோடியே 99 லட்சமாக அதிகரித்துள்ளது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்