கொரோனாவால் செத்துகிட்டு இருக்காங்க... நீங்க இப்படி இருக்கீங்க? வெளிநாட்டில் இருக்கும் தமிழனின் எச்சரிக்கை வீடியோ

Report Print Santhan in ஐரோப்பா

நெதர்லாந்தில் இருக்கும் தமிழர் ஒருவர் கொரோனா வைரஸின் தீவிரம் இந்திய மக்களுக்கு தெரியவில்லை என்று ஆதங்கமாக பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தும் கொடிய நோயாக மாறி வருகிறது. இதனால் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவி பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மக்கள் கொரோனாவின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல், இன்னும் ஒன்றாக கூடி பேசுவது, காய்கறி கடைகளில் ஒன்று கூடுவது என்று இருக்கின்றனர். இதனால் அதில் யாருக்காவது ஒருவருக்கு கொரோனா இருந்தால், அது அப்படியே பரவ வாய்ப்புண்டு.

இந்நிலையில் நெதர்லாந்தில் இருக்கும் தமிழர் ஒருவர் ஆதங்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உங்களுக்கு எல்லாம் கொரோனாவின் தீவிரம் தெரியவில்லை.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்...

நான் இருக்கும் நாட்டில் பாருங்கள், யாராவது இருக்கிறார்களா? இங்கிருக்கும் மக்கள் அந்தளவிற்கு அரசிற்கு ஒத்துழைக்கின்றனர்.

ஆனால் நீங்கள் என்னடா? என்றால் காய்கறி கடைகளில் கூட்டம் கூடுவது, நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பது, டிக் டாக் வீடியோ ஒன்று சேர்ந்து போடுவது என்று இருக்கிறீர்கள்.

எனக்கு அருகில் தான் இத்தாலி இருக்கிறது. அங்கு இறந்தவர்களை கூட பார்க்க முடியவில்லை, அந்தளவிற்கு இந்த நோய் தீவிரமாக பரவி வருகிறது. அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கிறது என்றால், வீட்டிற்குள்ளே இருங்கள், தேவையில்லாமல் இந்த ஊடகங்கள் எல்லாம் பீதியை கிளப்பாதீர்கள்.

குறிப்பிட்ட ஊடகம் ஒன்று தமிழகத்தின் மதுரையில் கொரோனாவால் இறந்தவரின் செய்தியை நான்கு மணி நேரம் காட்டுகிறது. இதனால் மக்கள் தான் பீதியடைவார்கள், வீட்டிற்குள்ளே இருங்கள்.

ஒரு வீட்டுக்கு ஒரு பொலிசையா போட முடியும்? அரசு வீட்டிற்கு ஒரு பொலிஸ் போடுமா? அல்லது வெளிநாட்டில் இருந்து வருபவர்களை சோதனை செய்யுமா? நீங்களே சுயமாக யோசியுங்கள் என்று வேதனையுடன் பேசியுள்ளார்.

அவர் இருக்கும் நெதர்லாந்தில் தற்போது வரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 6,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 356 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்