பிரித்தானியாவுக்கு விதிக்கப்பட்ட பயண தடையை நீக்குவதாக பல்கேரியா அறிவித்துள்ளது.
புதிய வகை கொரோனா கண்டபிடிக்கப்பட்டதாக பிரித்தானியா அறிவித்ததை தொடர்ந்து பல நாடுகள் எல்லைகளை மூடின.
அந்த வரிசையில் கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவும் பிரித்தானியாவுக்கு தனது வான், சாலை மற்றும் கடல் எல்லைகளை மூடி தடை விதித்தது.
இந்நிலையில், இன்று காலை 10 மணி முதல் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்கள் பல்கேரியாவில் தரையிறக்க அனுமதிக்கப்படும் என்று பல்கேரியா அரசு அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து வருபவர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று பல்கேரியா அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.