உடல் பருமனால் அவஸ்தைபடும் நபர்களுக்கு இதோ சூப்பர் ஐடியா

Report Print Kavitha in உடற்பயிற்சி

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கு கூட உடல் எடையினை குறைப்பது என்பது பெரும் சவாலாகவே உள்ளது.

இதற்கு ஜிம் சென்று பல கடினமான உடற்பயிற்ச்சிகளை மேற்கொண்டு தான் உடல் எடையினை குறைப்பது என்பது இனி தேவையில்லை அதற்கு இலகு வழிகளில் யோக பயிற்ச்சிகளை வீட்டிலிருந்து மேற்கொண்டாலே போதுமானது.

கொழுப்பை கரைக்க யோகாவில் எவ்வளவோ ஆசனங்கள் உண்டு, அதில் ஒன்றுதான் சலபாசனா.

சலபாசனாவை எப்படி செய்யலாம் என பார்க்கலாம் வாருங்கள்.

செய்முறை

முதலில் தரை விரிப்பில் குப்புற கால் நீட்டிப் படுத்துக் கொள்ளுங்கள். கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். தலையை நேராக வைத்துக் கொள்ளுங்கள். நாடி தரையில் பதிய வேண்டும்.

ஆழ்ந்து மூச்சை விட்டு, மெதுவாக தலையை உயர்த்துங்கள். மார்புப் பகுதிவரை வரை மேலே தூக்குங்கள்.

பின்னர் கால்களையும் தொடைப்பகுதியையும் அவ்வாறே தூக்கவேண்டும்.

இடுப்பு மட்டுமே தரையில் இருக்க வேண்டும். படகுபோல தோற்றம் இருக்கும்.

கைகளையும் பின்னாடி கொண்டு செல்லுங்கள்.

சில நொடிகளில் இந்த நிலையில் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டபடி இருங்கள். பின்னர் மெதுவாய் தளர்ந்து, இயல்பு நிலைக்கு வர வேண்டும். இதுபோல் 8-10 முறை செய்யலாம்.

இவ்வாறு செய்வதனால் உடல் எடை குறையும். தசைகள் வலுப் பெறும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அடிவயிற்றில் கொழுப்புகளை கரைக்கும். அங்குள்ள உறுப்புக்களை நன்றாக இயங்க வைக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். முதுவலி என்பன மாயமாகிவிடும்.

முக்கிய குறிப்பு - கழுத்து, முதுகுத் தண்டில் அடிப்பட்டவர்கள் இந்த ஆசனத்தை செய்வது தவிர்க்கவும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்