புதிதாக உடற்பயிற்சி செய்பவர்களா நீங்கள்? இதை கட்டாயம் படிங்க

Report Print Jayapradha in உடற்பயிற்சி

தசைகளை வலுப்படுத்துவதற்கும் மற்றும் உடலில் இருக்கும் கொழுப்பை அகற்றுவதற்காக செய்யும் பயிற்சிகள் ஒன்று தான் உடற்பயிற்சி ஆகும்.

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியும், சரியான உணவுப்பழக்கமும் தேவையானது. நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை.

இதை மாற்றி உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடற்பயிற்சி மேற்கொண்டால் நோயற்றவாழ்வு வாழலாம்.

இதற்கு ஜிம் சென்று பல கடினமான உடற்பயிற்ச்சிகளை மேற்கொண்டுதான் உடற்பயிற்சியை சேய்ய வேண்டும் என்பதில்லை அதற்கு இலகு வழிகளில் யோக பயிற்ச்சிகளை வீட்டிலிருந்து மேற்கொண்டாலே போதுமானது.

புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள் செய்ய வேண்டியவை.

  • புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள் சுய பயிற்சிகளை தவிர்த்து ஜிம்முக்கு சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உடற்பயிற்சியினை மேற்கொள்ளவேண்டும்.

  • அதிகாலையில் உடற்பயிற்சிக்கு பிறகுதான் மற்ற வேலைகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.மேலும் தினமும் காலையில் பயிற்சி செய்தால் அன்று முழுவதும் உடல் உற்சாகமாக இருக்கும்.

  • தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்களில் இரண்டு வாங்கி, இரண்டு கைகளிலுமாக பிடித்துக்கொண்டு ஸ்டென்ர்த் எக்சசைஸ் செய்வதும் நல்ல பலன்தரும்.மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங் செய்வது மிகவும் நல்லது.

  • ஜிம்முக்கு போகும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ட்ரெட் மில், சைக்கிளிங் போன்ற பயிற்சி கருவிகளை வாங்கி வீட்டிலே வைத்து பயிற்சி மேற்கொள்ளலாம்.

  • ஜிம் தேர்ந்தெடுக்கும்போது தேவையான வெளிச்சம், காற்றோட்டமும் இருப்பது நல்லது. மன துக்கு உற்சாகமும், பாசிட்டிவ் எனர்ஜியும் கிடைக்கும் விதத்தில் ஜிம் அமைந்திருக்க வேண்டும்.

  • வாரத்தில் 5 அல்லது 6 நாட்கள் ஒரு மணிநேரத்திற்குக் குறையாத அளவிற்கு பயிற்சியை மேற்கொண்டால் உடலுக்கும் மனதுக்கும் நல்லது.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்