நல்லா பிட்டா இருக்கணுமா? இந்த ஜூஸை கண்டிப்பாக சாப்பிடவும்

Report Print Printha in உணவு

நாம் அன்றாடம் வாழ்வில் சத்தான உணவுகள் மற்றும் பழங்களை சாப்பிடாமல் இருப்பதால், நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் குறைந்து பக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் போன்றவை தாக்கி பலவகையான நோய்களின் தொற்றுகளுக்கு ஆளாகின்றோம்.

எனவே உடலுக்கு ஆரோக்கியமான நோயெதிர்ப்பு சக்தியை தரக்கூடிய பழங்களின் ஜூஸ்களை தினமும் குடித்து வந்தால், நோய் தொற்றிலிருந்து விடுபடலாம்.

க்ரீன் டீ

பக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்க்கும் சக்தி க்ரீன் டீயில் உள்ளது. எனவே இதை தினமும் குடித்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தி நமக்கு கிடைக்கின்றது.

மேலும் இந்த கிரீன்டீ புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றது.

கிவி ஜூஸ்

கிவி பழத்தில் விட்டமின் A, E, C, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால், இந்தப் பழத்தை ஜூஸ் செய்து குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து இதயம் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

கேரட் ஜூஸ்

கேரட் நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதால், இதை ஜூஸ் செய்து குடிக்கலாம். இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் கல்லீரல் சீராக இயங்கும் தன்மையைப் பெறுகின்றது.

லெமன் ஜூஸ்

தினமும் எலுமிச்சை ஜூஸை குடித்து வருவதால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் விட்டமின் C நமக்கு அதிகமாக கிடைக்கிறது. மேலும் இது உடலின் அமிலத்தன்மையை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட்டில் பீட்டா கரோட்டீன், விட்டமின் C, சல்பர், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற ஏராளமான சத்துகள் நிறைந்து உள்ளது.

இதனை தினமும் குடித்து வந்தால், நோய்களின் தாக்கம் குறைந்து, மூளையின் இயக்கத்தை சீராக வைத்து கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளப் பயன்படுகின்றது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments