இலங்கை கோழி பிரியாணி செய்வது எப்படி ?

Report Print Deepthi Deepthi in உணவு

சிக்கன் பிரியாணி என்பது அசைவ ப்ரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும்.

இது வெவ்வேறு நாடுகளில் வேறு விதமாக தயார் செய்யப்படுகிறது. தற்போது இலங்கையில் செய்யப்படும் கோழி பிரியாணி செய்வது எப்படி

செய்முறை

கறி மிளாய்தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து கோழியை இறைச்சியை சேர்த்து கிளறி 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவிட வேண்டும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு. முந்திரி பருப்பு,காய்ந்த திராட்சை, ஏலக்காய், கருவாப்பட்டை ரம்ப இலை ஆகியவற்றை சேர்த்து தனியாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

கறி சமைக்கும் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், பெருஞ்சீரகம், கடுகு, ரம்பை, கருவேப்பிலை, தக்காளி சேர்ந்து தாளிக்க வேண்டும்.

பின்னர் தயிர், சிறிதளவு தண்ணீர் விட்டு. தாளித்து வைத்துள்ள கலவையுடன் கோழியை நன்றாக வேகவிட வேண்டும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் கோழி கறியுடன் வேக வைத்த அரிசியை இட்டு. கிளறி மூடி அரை சூட்டில் அடுப்பில் வைக்க வேண்டும்.

இறக்கிய பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு உட்பட பொருட்களை தூவி விட வேண்டும்.

தற்போது சுவையான கோழி பிரியாணி தயார்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments