அனைவரும் சாப்பிடக்கூடிய சத்தான கோதுமை ரவை புட்டு செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

கோதுமை என்பது தானிய வகைகளில் ஒன்றாகும்.

பெரியோர் முதல் சிறியவர் வரை அனைவரும் சாப்பிட சத்தான உணவு கோதுமை ஆகும்.

கோதுமையில் தயாரிக்கப்படும் சத்தான ரவை புட்டு எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • கோதுமை ரவை - 3 கப்
  • தேங்காய்த் துருவல் - 2 கப்
  • வாழைப்பழம் - 2
  • நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
  • உப்பு - சிறிதளவு
செய்முறை

கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து அகலமான பாத்திரத்தில் போடவும்.

இதில் கொஞ்சம் சூடான நீர் தெளித்து ஈரப்பதத்துடன் பிசைந்து கொள்ளவும்.

புட்டுக் குழலில் தேங்காய் துருவல் கொஞ்சம் போட்டு அடுத்து பிசைந்த ரவை போட்டு மீண்டும் தேங்காய் துருவல் என நிரப்பி 10 முதல் 12 நிமிடங்கள் வேக வைக்கவும்.

வெந்ததும் வாழைப்பழம், நாட்டு சர்க்கரை போட்டு பிசைந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

சூப்பரான கோதுமை ரவை புட்டு தயார்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்