சத்து நிறைந்த கேரட் தக்காளி சூப் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு
200Shares

தினமும் ஏதாவது சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

அந்த வகையில் இன்று கேரட், தக்காளி சேர்த்து சூப் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • கேரட் - 1
  • பழுத்த பெங்களூர் தக்காளி - 3
  • பெரிய வெங்காயம் - 1/2 அளவு
  • கொத்தமல்லித்தழை - சிறிது
  • தண்ணீர் - 400 மி.லி
  • உப்பு, மிளகுத் தூள் - தேவைக்கு
  • கிராம்பு - 2
  • பூண்டு - 2 பல்
  • பட்டை - 1/2 இன்ச் அளவு.
செய்முறை

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், கேரட், பூண்டு, பட்டை, கிராம்பு, மிளகுத் தூள், தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 2 விசில் விட்டு தக்காளியை வேக விடவும்.

சூடு ஆறியதும் நன்கு மசித்து வடித்துக் கொள்ளவும்.

குறைவான சூட்டில் 300 மி.லி. வரும் வரை சூப்பைச் சூடு செய்து, உப்பு சேர்த்து கலந்து, கடைசியாக நறுக்கிய கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்