உலக கிண்ணக் கால்பந்தாட்ட போட்டி: சுவாரசிய தகவல்கள்

Report Print Fathima Fathima in கால்பந்து
267Shares
267Shares
lankasrimarket.com

ரஷ்யாவில் நாளை முதல் ஜீலை 15ம் திகதி வரை 21வது உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதை பற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ,

  • உலக கிண்ணப் போட்டிகள் நடக்கும் ரஷ்யாவின் நகரங்கள் ஐரோப்பா மற்றும் ஆசியா என இரு கண்டங்களிலும் அமைந்துள்ளன, ஒரே நேரத்தில் இரு கண்டங்களில் நடக்கும் முதல் போட்டி இதுவாகும்.
  • உலக கிண்ணப் போட்டிகளை கண்டுகளிக்க கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் ரஷ்யாவுக்கு வருகை தருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
  • தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வாயிலாக 300 கோடி பேர் பார்ப்பார்கள் என கூறப்படுகிறது.
  • தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷ்யாவும்(தரவரிசை 70), சவுதி அரேபியாவும்(தரவரிசை 67) மோதுகின்றன, தரவரிசையில் பின்தங்கிய அணிகள் மோதுவது இதுவே முதன்முறையாகும்.
  • இந்த உலக கோப்பையில் முதல் முறையாக ‘வி.ஏ.ஆர்.’ எனப்படும் வீடியோ உதவி நடுவர்கள் முறை அமல்படுத்தப்படுகிறது. பிரத்யேக அறையில் அமர்ந்து கண்காணிக்கும் இந்த உதவி நடுவர்கள், ஒவ்வொரு போட்டி நடைபெறும் போது, அதன் வீடியோ பதிவுகளை ஒரு நொடி கூட விடாமல் தொடர்ந்து பார்ப்பார்கள், ஏதேனும் தவறு நேர்ந்தால் உடனடியாக சுட்டுக்காட்டுவார்கள்.
  • உலக கிண்ணப் போட்டியில் விளையாடினால் மூத்த வீரர் என்ற பெருமையை எகிப்து கோல் கீப்பர் எஸ்சாம் ஐ ஹதாரியும்(வயது 45), இளம் வீரர் என்ற பெருமையை அவுஸ்திரேலிய நடுகள வீரர் டேனியல் அர்ஜானியும்(வயது 19) பெறுகிறார்கள்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்