இங்கிலாந்து அணிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ்

Report Print Kabilan in கால்பந்து
129Shares
129Shares
lankasrimarket.com

ரஷ்ய உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் வித்தியாசமான முறையில் பிரத்யேக வாழ்த்தினை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன.

நேற்று நடந்த இங்கிலாந்து- ஸ்வீடன் அணிகளுக்கிடையேயான போட்டியில், இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீட்னை வீழ்த்தியது.

இதன்மூலம், 28 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து, வரும் 10ஆம் திகதி நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியா அணியுடன் மோத உள்ளது.

தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வரும் இங்கிலாந்து அணி உலகக் கிண்ணத்தை வெல்லும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடும் எனும் நம்பிக்கையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் பிரத்யேக வாழ்த்தினை தெரிவித்துள்ளது.

இதற்காக Boarding Pass வடிவிலான வாழ்த்து அட்டை ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இங்கிலாந்து அணி, வரும் 15ஆம் திகதி மாஸ்கோவில் இருந்து லண்டனுக்கு திரும்பும் என்பதை குறிக்கும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்