ரொனால்டோவை மாற்றுவது எளிதானது அல்ல: யுவாண்டஸ் கிளப் அணி

Report Print Kabilan in கால்பந்து

நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை மாற்றுவது எளிதல்ல என யுவாண்டஸ் கிளப் அணியின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ரியல் மாட்ரிட் கிளப் அணியில் விளையாடி வந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கடந்த சீசனுக்கு பின் யுவாண்டஸ் அணியில் இணைந்தார். அதன் பின்னர் யுவாண்டஸ் அணி தோல்வியை சந்திக்காமல் வெற்றிகளை குவித்து வருகிறது.

இந்நிலையில், ரொனால்டோ தங்கள் அணியில் விளையாடி வருவது குறித்து யுவாண்டஸ் அணியின் இயக்குனர் பராட்டிசி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ’எக்காரணத்தைக் கொண்டும் ரொனால்டோவை விட்டுத்தர மாட்டோம். எங்கள் அணியில் சேர தொடக்கம் முதலே அவர் ஆர்வம் காண்பித்தார். இது சாதகமாக அமைந்தது.

இதற்கிடையே, யுவாண்டஸ் அணியில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சென்ற, உலகக் கிண்ண வெற்றி வீரரான பால் போக்பா மீண்டும் எங்கள் அணிக்கு வர வாய்ப்பில்லை என்றார். ரொனால்டோவை மாற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல’ என தெரிவித்துள்ளார்.

ரொனால்டோ இல்லாமல் விளையாடி வரும் ரியல் மாட்ரிட் அணி, லா லிகா சீசனில் கடைசியாக விளையாடிய 3 போட்டிகளில் இரண்டில் தோல்வியுற்று, புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

Getty Images
AFP

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்