மீண்டும் பழைய அணிக்கு திரும்பும் நெய்மர்! வார சம்பளத்தில் 3கோடி இழப்பு

Report Print Abisha in கால்பந்து

பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் நெய்மர் மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் நெய்மர் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உள்ளார்.

இவர் கடந்த 2017-ம் ஆண்டு பார்சிலோனா அணியில் இருந்து பிஎஸ்ஜி அணிக்கு சென்றார். கால்பந்து வரலாற்றில் அதுவரை இல்லாத அளவிற்கு 198 மில்லியன் பவுண்டுக்கு பிஎஸ்ஜி அவரை வாங்கியது.

பார்சிலோனா அணி நெய்மரின் செல்வதை தடுக்க எவ்வளவோ முயன்றது. ஆனால் நெய்மர் வெளியேறுவதில் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி அவரை விடுவித்தது. பிஎஸ்ஜி அவருக்கு போதுமான அளவிற்கு சம்பளம் கொடுத்தாலும் பார்சிலோனா அணியில் விளையாடிய அளவிற்கு நெய்மருக்கு புகழ் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்ப முடிவு செய்தார். நெய்மர் வருவதை மெஸ்சியும் வரவேற்றார்.

ஆனால் பிஎஸ்ஜி நெய்மரை விடுவிக்க மறுப்பு தெரிவித்ததால் சிக்கல் ஏற்பட்டது. இருந்தாலும் பார்சிலோனாவுக்கு செல்லும் முயற்சியில் உறுதியாக உள்ளார். தற்போது பிஎஸ்ஜி வாரத்திற்கு ஆறு லட்சம் பவுண்டு சம்பளமாக கொடுக்கிறது. இதை மேலும் அதிகரித்து கொடுக்க தயாராக இருக்கிறது.

பார்சிலோனா அவருக்கு 18 மில்லியன் பவுண்டுதான் சம்பளமாக கொடுக்க முடியும் என்று கூறிவிட்டது. இதனால் நெய்மர் பார்சிலோனாவுக்கு வர விரும்பினால் அவரது வாரச் சம்பளத்தில் சுமார் 3 கோடி ரூபாயை இழக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் 3 கோடி ரூபாய் சம்பளத்தை இழக்க நெய்மர் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அவர், கொரோனாவுக்கு பின் மீண்டு பார்சிலோனா அணியில் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்