ரொனால்டோவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா! மிக முக்கிய போட்டியிலிருந்து ஓய்வு: ஏமாற்றத்தில் ரசிகர்கள்

Report Print Basu in கால்பந்து
118Shares

உலகின் முன்னணி கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் 13ம் திகதி ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான தேசிய லீக் தொடரில் பங்கேற்ற போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோவுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முதன் முறையாக கொரோனா உறுதியானது.

இதனையடுத்து, சுவீடன் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து ரொனால்டோவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

பின்னர், கடந்த வாரம் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் இத்தாலிக்கு சென்ற ரொனால்டோ, தான் நலமாக இருப்பதாகவும் எந்த அறிகுறியும் இல்லை என கூறினார்.

ஒன்பது நாட்களுக்குப் பிறகு 35 வயதான ரொனால்டோவுக்கு மீண்டும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது இரண்டாவது முறையாக உறுதியானது.

ரொனால்டோ தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அடுத்த வாரம் சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனாவுடன் ஜுவண்டஸ் மோதும் போட்டியை தவறவிடுவார் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஜுவண்டஸ் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்