மது, பன்றி இறைச்சி விற்பனை செய்யாத கடையை மூட உத்தரவு

Report Print Peterson Peterson in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் மது மற்றும் பன்றி இறைச்சி விற்பனை செய்ய வேண்டும் என்றும் தவறினால் கடையை மூட வேண்டும் என மேயர் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரீஸில் உள்ள Colombes Nicole Goueta பகுதியில் The Good Price என்ற சூப்பர் மார்க்கெட் ஒன்று கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் முதல் இயங்கி வருகிறது.

சூப்பர் மார்க்கெட்டை அமைக்கும்போது அனைத்து விதமான பொருட்களும் விற்பனை செய்யப்படும் என உரிமையாளரான Soulemane Yalcin என்பவர் உறுதி அளித்த பின்னர் அனுமதி கிடைத்துள்ளது.

ஆனால், கடந்த சில மாதங்களாக இந்த சூப்பர் மார்க்கெட்டில் மது மற்றும் பன்றி இறைச்சி விற்பனை செய்யப்படாததால், அப்பகுதி மக்கள் நீண்ட தூரம் சென்று பிற கடையில் வாங்கி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சூப்பர் மார்க்கெட் தனது ஒப்பந்தத்தை மீறி செயல்படுவதாக அப்பகுதி மக்கள் மேயரிடம் புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்ற மேயர் குறிப்பிட்ட அந்த சூப்பர் மார்க்கெட்டிற்கு நேரடியாக விஜயம் செய்துள்ளார். அப்போது, அங்கு மது மற்றும் பன்றி இறைச்சி விற்பனை செய்யப்படுவது இல்லை என தெரியவந்துள்ளது.

இது குறித்து விசாரணை செய்தபோது, மது விற்பனை செய்வதால் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுவதாகவும், பன்றி இறைச்சியை விற்பனை செய்தால், அதிக வருமான இழப்பு ஏற்படுவதால் அவற்றை விற்பனை செய்யவில்லை என உரிமையாளர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், இனிவரும் காலங்களில் சூப்பர் மார்க்கெட்டில் மது மற்றும் பன்றி இறைச்சி கட்டாயம் விற்பனை செய்ய வேண்டும் என்றும் தவறினால், சூப்பர் மார்க்கெட் நிரந்திரமாக மூடப்படும் என மேயர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments